விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது.....
நண்பர் விக்ரம் அவர்களுக்கு...
கடந்த மூன்று வருடகாலமாக நீங்கள் மிக ஊம் கஷ்ட்ட பட்டு நடிக்க ஆனால் அந்த படங்களின் இறுதி நிலை சராசரி அல்லது தோல்வி படம் என்று தான் முடிகிறது.
தங்களின் தற்போதைய கந்தசாமியும் இந்த மாதிரி ஆகி விட்டதில் ரொம்ம்பவே வருத்தம் தான். கமலுக்கு அடுத்தபடி நிங்கள் தான் நடிப்பில் மெனக்கெட்டு உங்களை வருதிக்கிகொண்டு 100% அர்பணிப்பு செய்து எல்லா படத்திலும் நடிகிறீர்கள். ஆனால் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.
நேற்று வந்த விஜயகாந்த் முதல் இன்று வந்த சாம் அண்டர்சன் வரை சென்னை கோட்டையை புடிக்க பிளான் பண்ணும் போது நீங்கள் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.
ஒருமுறை சூப்பர் ஸ்டார் கூட உங்களிடம் வருடர்த்திர்க்கு ஒரு படமாவது பண்ண சொன்னார் என்று சொன்னிர்கள். நீங்கள் நடித்த கடைசி மூன்று படம்களும் வணிக ரீதியாக சுமார் அல்லது தோல்வி படம். இந்த நிலையில் நீங்கள் 2 அல்லது 3 வருடங்கல்லுக்கு ஒரு படம் அது கூட சுமார் அல்லது தோல்வி படம் என்றால் உங்களின் உழைப்பு, 100% அர்பணிப்பு எல்லாம் விழலுக்கு இரைத்த நீர் போல் வீணாகி விடுகிறது.
வெற்றி பெற்றவனை மட்டுமே இந்த சினிமா உலகம் கொண்டாடும். சரித்திர புருஷனே தோல்வியை கொடுத்தால் இந்த சினிமா உலகம் எள்ளி நகையாடும் என்று தோல்விகள் பல கண்டு விடா முயற்சியால் வெற்றி நாயகனாக மாறிய உங்கள்ளுக்கு நங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மீண்டும் உங்களால் பழைய நிலைக்கு சென்று மீண்டு வர நம்பிக்கை உங்கள்ளுக்கு இருந்தாலும் இன்றையை எதார்த்த சினிமா உலகில் சாத்தியமா என்று தெரியவில்லை. எனேன்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் அல்லது கமல் ஹாசன் அல்ல.
பிரமாண்டம், பெரிய டைரக்டர் , பெரிய பேனர், 1000 பிரிண்ட் போன்ற மாயையில் இருந்து வெளி வாருங்கள். உங்களின் அபார நடிப்பால் மிக நல்ல கதைகளில் நடியுங்கள். பல புதிய டைரக்டர் களின் வரவால் தமிழ் சினிமா தற்போது ஒரு ஆரோகியமான திசை நோக்கி பயணிப்பது போல் தெரிகிறது. இது போன்ற சுழலில் உங்களை போன்ன்ற நடிகர்கள் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக முடியும்.
அன்புடன்
மனதில் பட்டதை சொன்ன நிறையுடன்,
----- நாய்க்குட்டி ------------
1 comment:
//இன்று வந்த சாம் அண்டர்சன் வரை சென்னை கோட்டையை புடிக்க பிளான் பண்ணும் போது//
:(((((((((((((((
:(((((((((((((((
Post a Comment