11.5.09

கார் ஓட்டிக்கொண்டே "ஆய்" போவது எப்படி ..?




4.5.09

எதற்காக இந்த உண்ணா விரதம் ....

இடம் : மு க வீடு

பாத்திரங்கள் : டாக்டர், மனைவியர், துணைவியார், மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.

மு.க : டாக்டர், ரெண்டு நாலா வயிறு சரில்லை. கொஞ்சம் செக் பண்ணுங்கோ

டாக்டர் : ( செக் பண்ணி விட்டு ), கொஞ்சம் ஜீரன கோளாறு, ஒரு வேளை சாப்பிடாம இருந்திங்கன சரியா போய்டும்.

மு.க : ஐயகோ ! ஒரு வேளை சாப்பிடாமல் எப்படி இருக்க போகிறேன் ? இந்த உயிர் இருப்பதே தமிழ் இனத்துக்காக தானே ! எனக்கு எதாவது ஆகி விட்டால் ஏன் இனத்தை யார் காப்பாற்றுவார்கள் ?

மனைவியர் : சும்மா இருங்க ! இது நம்ம வீடு ! இங்க போய் பொது கூட்டதுல பேசுறா மாதிரி பேசுறிங்க....

குடும்ப உறுப்பினர் : எலக்ஷன் நேரத்துல இப்படி இருந்த எப்படி? ஏற்கனேவே ஈழம் பெரச்சனை வேற... எல்லோரும் நம்ம மேல காண்டா இருக்காங்கோ...

அப்போது முறை மருகன் ஓடி வருகிறார்..

முறை மருகன் : தலைவரே ! இந்த அநியாயத்த பாருங்கோ.. நம்ம அம்மையார் ராணுவத்த அனுப்புவங்கலாம்... ஈழத்த ஆதரிக்கிறார்களாம்..

குடும்ப உறுப்பினர் 2 : போச்சுட ! ஏதோ இவர் தான் தமிழின தலைவர்ன்னு இவளோ நாள் மெயின் டைன் பண்ணி கொண்டிருந்தோம். எப்போ இது வேற...

குடும்ப உறுப்பினர் 3 : நம்ம கிட்ட மோதறதே இந்த அம்மாஉக்கு வேலையா போச்சு.. நமக்கு ஏதோ கட்டம் சரி இல்லை போலிருக்கு...

மு.க : இப்ப தான் தொகுதி பங்கிடு பெரச்சனை முடிஞ்சது.,. உஸ்... ........ இன்னும் பிரசாரம் இருக்கு.. வெற்றியா தோல்விய ஒன்னும் புரியல.. அதுக்குள்ள இது வேறையா... இப்பவே கண்ண கட்டுதே....

முறை மருகன் : கவலை படாதீங்க தலைவரே ! இந்த அம்மையாருக்கு ஒரு அறிக்கை ரெடி பண்ணி நம்ம ஸூர மணிய விட்டு பதில் அறிக்கை கொடுக்கலாம்.

மு.க : இன்னும்மாயா அவரு நம்மள நம்பராறு...?

முறை மருகன் : அவரு நம்பறதா யார் பார்த்தாங்க. நீங்க ஒரு அறிக்கை குடுங்க, நாம அவரு பேர்ல பத்திரிக்கைக்கு கொடுத்தது.. அப்புறமா அவருக்கு போன் போட்டு சொல்லிடலாம்...

குடும்ப உறுப்பினர் 3 : இதெல்லாம் தெரியாதமாதிரி கேக்குறிங்க.. ரொம்ப தான் ....

அப்போது ஆற்காட்டார் முகத்தில் சந்தோஷத்துடன் வருகிறார்..

மு.க : என்னையா.. ஒரே சந்தோஷமா இருக்கே.. எனக்கு உடம்பு சரிஇல்லைன்னா உனக்கு சந்தோஷமா?

ஆற்காட்டார் : தப்பா நினைக்காதிங்க தலைவரே .. இப்ப தான் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க... அத வாங்கிட்டு நேரா இங்க தான் வரேன்.. இங்க வந்த தான் தெரியுது உங்கள்ளுக்கு உடம்பு சரி இல்லைன்னு.. வெளிய ஏதும் பெரிசா பெரச்சனை இல்லை தலைவரே ! இப்ப என்ன தலைவரே உடம்புக்கு ....

மு.க : இந்த தடவ நெஜமாகவே உடம்பு சரிஇல்லை.

ஆற்காட்டார் : ( மனதுக்குள் அப்பாடி இந்த வாரம் கவிதை ஏதும் எழுத மாட்டாரு. தமிழ் அருவி பாக்கறதுல இருந்து தப்பிச்சேன்,... ஐய்யா.... இந்த சண்டே ஒரே ஜாலி தான்..)

மு.க : என்ன ஆற்காடு.. நீ என்ன நினைக்கேற.. எனக்கு தெரியுது.. மொத்தமா நூறு வாரத்துக்கு ஏற்கனவே எழுதி ஷூட்டிங் கூட பண்ணியாச்சு... அது சரி உனக்கு யாரு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க...?

ஆற்காட்டார் : இந்த ஜெனரெட்டேர், பேட்டரி, யு.பி.எஸ் சங்கத்த சேந்தவங்க அவங்க தொழில்ல ஒரே வருஷத்துல இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலையும் செய்யாத மிக பெரிய முன்னேற்றத்த இவங்க தொழில்ல கொண்டு வந்ததற்காக என்ன பாராட்டி இந்த பட்டத்த கொடுத்தாங்க... அது சரி தலைவரே இப்போ உடம்ப்பு இன்ன ஆச்சு..?

டாக்டர் : ஒன்னும் இல்லேங்க .. சாதாரண ஜீரண கோளாறு ..

ஆற்காட்டார் : தலைவரே இதுக்கு போய் கவலை படாதீங்க.. சுக்கும் மிளகும் சேத்து.. அரச்சு ... ( முடிக்கும் முன் )

மு.க : நிறுத்துயா .... ஏன்யா .. டாக்டர் பட்டம் வாங்க உடனே உனக்கு டாக்டருன்னு நெனப்ப..? உடனே நீயே வைத்தியம் சொல்லறே..

( ஆற்காட்டார் மனதில் இந்த டாக்டர் பட்டதுக்கே இப்படின்னா நாளைக்கு இந்த மெழுகு வர்த்தி தயாரிக்கிற சங்குத்துல ஒரு விருது எனக்கு குடுக்குறாங்கோ.. அதுக்கு என்ன சொல்லுவாரோ ... )

முறை முருகன் : தலைவர அத அப்பறம் பாக்கலாம். அப்போ இந்த பெர்ச்சனைக்கு ஒரு யோசனை சொல்லுங்க....

டாக்டர : ஒரு வேளை தானே ! காலையில் எதுஉம் சாப்பிடாமல் ஒரு 1 அல்லது 2 மணி வாக்கில் சாப்பிடீங்கன்ன எல்லாம் சரியா போய்டும்.

மு.க : சரி யாரும் கவலை படாதீங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நாளைக்கு பாருங்க உங்களுக்கே புரியும். அப்புறம் எல்லாரும் என்ன வந்து பாக்கணும்.

அப்புறம் நடந்தது என்ன .......? ஊருக்கே தெரியும் ... உங்களுக்கு தெரியாத?