5.9.09

ஆ.தி.மு.க ஒரு உள்ள குமுறல் ...

இடம் : கொட நாடு எஸ்டேட்.

ஜெ : என்ன சசி நம்ம கட்சியில இருந்து நெறைய பேர் நம்மளை விட்டு இந்த மைனாரிட்டி தி.மு. க. வில் சேருகிறார்கள்?

சசி : விடுக்கா... போனா போகட்டும்..

ஜெ : இல்ல சசி இப்படியே விட்டா நாம கட்சி எப்படி நடத்தறுது...?

சசி : கவலை படதிங்கக்கா.. ஏன் அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுங்க அவன் எல்லா பிர்ச்ச்னையும் முடித்து விடுவான்.

ஜெ : ஆமாம் .. ஏற்கனேவே உன் குடும்பதுள்ள உள்ள எல்லாருக்கும் பதவி கொடுத்து கொடுத்து தான் எப்படி எல்லா உண்மை விசுவாசிகளும் ஓடிவிட்டார்கள். இன்னும் வேற பதவி வேணுமா ?

சசி : அக்கா.. ஏன் குடும்பத்து ஆட்கள் வந்து தான் கட்சிய பல படுதுனார்கள். எவ்வளோ காச நாங்க செலவு பண்ணோம் தெரியுமா ?

ஜெ : யார் காசு செலவு பண்ணது ? நீங்களா ..? என்னையும் ஏன் கட்சியும் வச்சி தானே இவ்வளவு சம்பாதிதிர்கள்...?

சசி : அக்கா சும்மா பேசாதிர்கள்.. அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுக்க முடியும் முடியாதா ..?

ஜெ : சசி இனிமே உங்க குடும்பத்துல யாருக்கும் எந்த பதவியும் கிடையாது ....

சசி : அக்கா . நல்ல யோசிச்சு சொல்லுங்க.. அப்புறம் நீங்க தான் வருத்த படுவீங்க..

ஜெ : நானா ..? வருத்த படுவனா ..? டென்சன் பண்ணாத சசி..
ஜெ தன் உதவியாளரை குப்பிட்டு

நம்ம அனிதா ராதாகிர்ஷ்ணனை குப்பிடுங்க..

உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் இருவது நாள் ஆகுதம்மா..

ஜெ : அப்ப சேகரை குப்பிடுங்க..

உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் ஒரு மாதம் ஆகுதம்மா..

ஜெ : நம்ம சைதை துரைசாமி, ஈரோடு முத்துசாமி இவங்கெல்லாம்...

உதவி : அவங்கெல்லாம் நம்மள விட்டு ஒதுங்கி பல வருஷ்மாச்சியம்மா...

ஜெ : அப்போ நம்ம கட்சியில யார் தான் இருக்காங்கோ..

சசி : நீங்க மட்டும் தான் இருக்கீங்க...

ஜெ : சசி அப்போ நீ ?

சசி : ஒன்னும் இல்லாத எடத்துல என்ன பண்ணறது ... நானும் கிளம்புறேன் .. பை பை அக்கா ....

அப்போது பின்னணியில் சூப்பர் ஸ்டாரின் பாடல்...

நேத்து இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கர சேர்த்து
ஆடும் இந்த தோநி

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கரு வேப்பிலை
அது யரோ நான் தானோ ............
----------------------------
--------------------------

ஊர தெரிஞ்சிகிட்டன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி ஏன் கண்மணி
நாளும் தெரிஞ்சிடிச்சி
நாளும் புருஞ்சிடிச்சு
கண்மணி ஏன் கண்மணி

அப்போது உதவி .......

" அம்மா நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே... "

ஜெ : சொல்லுங்க பரவாயில்லை, நான் நம்புனவன்களே என்னை ஏமாத்திட்டாங்க..

உதவி : அம்மா நம்ம கட்சி எப்பவுமே காசுக்கு விலை போற கட்சி இல்லம்மா.உணர்வாலும், உள்ளத்தாலும் எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்துக்கு மட்டுமே தலை வணங்கி எப்பவுமே கட்சிக்காக உண்மையாக வேலை பார்த்து வெற்றி மட்டுமே சுவைக்க தெரிந்த கூட்டம் இதும்மா. ஆனால் இன்று ஒரு சுயநலம் மிக்க மனிதர்களினால் உங்களால் கூட எதையுமே செய்ய முடியாத அளவிற்கு கட்சி பலவீனமாகிவிட்டது. நேத்து வந்தவங்க கூட எல்லாம் நம்ம புரட்சி தலைவரை சொந்தம் கொண்டாடி ஓட்டு வாங்குறாங்க.. ஆனா நாம தான் அவரை மறந்து விட்டோம். பதவி ஆசை, பணத்தாசை புடிச்ச கூட்டம் தாம்மா ஓடி விட்டது. உண்மையாய் நம்ம தலைவரை நேசிக்கும் கூட்டம் இன்னைக்கும் அப்படியே இருக்கு. நீங்க அவங்க எல்லாரையும் ஒருமுக படுத்தி தகுந்த மரியாதை கொடுத்து கட்சியை பல படுத்துங்க. அப்போ தெரியும் இந்த எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்தோட மகிமையை.


ஜெ : என்னோட கண்ணை திறந்தீர்கள். இனி நானும் கழகமே கோயில் ! நம்ம தலைவரே தெய்வம் என்று இருந்து எல்லா உண்மை தொண்டனையும் நேரில் சந்தித்து கட்சியை பல படுத்துவேன். இனி யாரும் என்னை புரட்சி தலைவி என்று சொல்ல வேண்டாம். அவரவரின் வயதிற்கேப்ப சகோதரி இல்லை அம்மா என்று அழைத்தல் போதும். பழைய விசுவாசிகள் அனைவரையும் அரவணைத்து, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட, விலக்கப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். உண்மை தொண்டனுக்கே இனிமே பதவிகளை தருவேன். அனைவருக்கும் சரி சமமான மரியாதையை தருவேன். யாரும் ஏன் முன் கை கட்டி, காலில் விழ வைக்க மாட்டேன். தெருவில் இறங்கி மக்களுக்க போராடுவேன். இனி ஓய்வு என்பதே இல்லை. நம்முடைய எல்லா முயற்சிக்களுக்கும் புரட்சி தலைவரின் ஆன்மா துணை இருக்கும் என எல்லா வல்ல இறைவனை வேண்டி புது பாதையில் வழி நடப்பேன்.




வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்




வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்
கோடிமக்களின் மனதில் நின்றவர் யார் ?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதெல்லாம் நடக்குமா ...? இல்லை ஆ.தி.மு.க என்ற ஆலமரம் சாய்ந்து விடுமா ?















































No comments: