18.10.11
ஒரு தமிழ் நாடு பஸ் driver ரும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும்
" சார் இந்த பக்கம் எந்த பஸ்சும் போக கூடாது உங்களுக்கு தெரியாதா ?"
"போன வாரம் கூட இந்த பக்கமா தான் வந்தேன் "
"சார் இப்ப ஒரு வாரமா தான் இந்தா மாதிரி மாத்தி விட்டிருக்கிறோம்.
உங்க டெப்போ ல சொல்லலையா ? "
" இல்ல சார், நான் இப்ப தான் இந்த ரூட்டுக்கு புதுசு".
"அதெல்லாம் தெரியாது சார், பைன் கட்டிட்டு போங்க "
" சார் இந்த ஒரு தரம் விட்டுடுங்க சார், நான் ரூட்டுக்கு புதுசு"
"எங்கலாஎல்லாம் ஒன்னும் பண்ண முடியாது 100 ருபாய் பைன் கட்டிட்டு போங்க "
" சார் எங்க படியே 25 ருபாய் தான் சார், நாங்க எங்க சொந்த பணம் தான் சார் கட்டனும் "
" பைன் கட்டுங்க ஒன்னும் பண்ண முடியாது. உங்க டிப்போல சொல்லி இருக்கணும், நாங்க எல்லா driver க்கும் தனி தனியா சொல்ல முடியாது. உங்க டிப்போல எப்பவோ சொல்லியாச்சு."
அந்த drivarum பைன் கட்டினார்.
இது பெங்களூர் மடிவாலாவில் இருந்து சில்க்போர்ட் போக பாலத்தின் பக்க வாட்டில் சென்று left எடுத்து ஒரு 'U' turn எடுத்து ஹோசூர், சேலம் டிக்கெட் ஏத்துவார்கள் தமிழ் நாடு பஸ் driverகள்.
இப்போது பாலம் வழியாக தான் போக வேண்டுமாம். வழி மாறி வந்த ஒரு தமிழ் நாடு பஸ் driver க்கும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும் நடந்த சம்பவம் தான் இது .
25 ருபாய் படி வாங்கி 100 ருபாய் பைன் கட்டிய அந்த driver நினைத்தால் ...
டெப்போ வில் நம்ம அதிகாரிங்க என்ன ம........ ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment