18.10.11
ஒரு தமிழ் நாடு பஸ் driver ரும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும்
" சார் இந்த பக்கம் எந்த பஸ்சும் போக கூடாது உங்களுக்கு தெரியாதா ?"
"போன வாரம் கூட இந்த பக்கமா தான் வந்தேன் "
"சார் இப்ப ஒரு வாரமா தான் இந்தா மாதிரி மாத்தி விட்டிருக்கிறோம்.
உங்க டெப்போ ல சொல்லலையா ? "
" இல்ல சார், நான் இப்ப தான் இந்த ரூட்டுக்கு புதுசு".
"அதெல்லாம் தெரியாது சார், பைன் கட்டிட்டு போங்க "
" சார் இந்த ஒரு தரம் விட்டுடுங்க சார், நான் ரூட்டுக்கு புதுசு"
"எங்கலாஎல்லாம் ஒன்னும் பண்ண முடியாது 100 ருபாய் பைன் கட்டிட்டு போங்க "
" சார் எங்க படியே 25 ருபாய் தான் சார், நாங்க எங்க சொந்த பணம் தான் சார் கட்டனும் "
" பைன் கட்டுங்க ஒன்னும் பண்ண முடியாது. உங்க டிப்போல சொல்லி இருக்கணும், நாங்க எல்லா driver க்கும் தனி தனியா சொல்ல முடியாது. உங்க டிப்போல எப்பவோ சொல்லியாச்சு."
அந்த drivarum பைன் கட்டினார்.
இது பெங்களூர் மடிவாலாவில் இருந்து சில்க்போர்ட் போக பாலத்தின் பக்க வாட்டில் சென்று left எடுத்து ஒரு 'U' turn எடுத்து ஹோசூர், சேலம் டிக்கெட் ஏத்துவார்கள் தமிழ் நாடு பஸ் driverகள்.
இப்போது பாலம் வழியாக தான் போக வேண்டுமாம். வழி மாறி வந்த ஒரு தமிழ் நாடு பஸ் driver க்கும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும் நடந்த சம்பவம் தான் இது .
25 ருபாய் படி வாங்கி 100 ருபாய் பைன் கட்டிய அந்த driver நினைத்தால் ...
டெப்போ வில் நம்ம அதிகாரிங்க என்ன ம........ ?
ரஜினி ரா - ஒன் ரகசியம்
உடல் நலம் பாதிக்க பட்டிருந்தும் ரஜினி காந்த ஏன் Ra-One ல் நடித்து கொடுத்தார் ? இது ஷாருக் மேல் இருக்கும் அன்பினால் என்றாலும் அதை தண்டி எதாவது ஒரு வியாபார காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். எப்போதெல்லாம் இந்தியாவில் பெரிய நடிகர்களை வைத்து பெரிய அளவில் பட்ஜெட் படம் எடுப்பது தான் முக்கிய காரணம். சர்வதேச அளவில் இந்திய படங்களின் விநியோகமும் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக தமிழ், ஹிந்தி படங்களின் வீச்சு கடல் தாண்டி வியாபாரம் ஆவது தான்.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர்கள் எல்லாம் மிக பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். குறைந்த பட்சம் 100 கோடி முதலீட்டில் வரும் படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்போதைய நிலவர படி மிக பெரிய hollywood பட தயாரிப்பு நிருவனகளும் இந்திய சினிமா வில் முதலிடு செய்ய விரும்புகிறார்கள். அவர்களை பொருத்தவரை 100 - 300 கோடி என்பது சிறிய தொகை.
அதேபோல் முதலீடுக்கு ஏத்த வகையில் வியாபாரமும் இருக்கிறது. பெரிய முதலீடுகளில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட பெரிய நடிகர்கலையே நடிக்க வைக்கிறார்கள். இவர்களால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கணக்கு.
மிக பெரிய பட்ஜெட் படம் இந்திய முழுவதும் ரிலீஸ் ஆனால் தான் லாபம் பாக்க முடியும். மேலும் திருட்டு VCD, DVD, internet downloading போன்ற ஆபத்துக்களை தாண்டி லாபம் பாக்க முடியும்.
இந்திய முழுமைக்கும் அவர்களின் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அந்த பட நடிகரின் பொறுப்பாகா கொடுக்கபடுகிறது தயாரிப்பு நிறுவனங்களால். அதற்கும் சேத்து தான் சம்பளம் பெசபடுகிறது.
அதாவது சூப்பர் ஸ்டார் நடிகர்களே அவர்களின் படத்தை மார்கெட்டிங் செய்ய வேண்டும்.
ரசிகர்களை ச ந்திப்பது, சின்ன திரை டாக் ஷோ, சிறப்பு பேட்டி, பரிசு போட்டிகள், தியேட்டர் விஜயம், என ஊர் ஊராக சுற்றி மார்க்கெட்டிங் செய்வது என்பது கட்டாயமாக்க படுகிறது.
எப்பாடு பட்டவதும் படத்தை வெற்றி படம் ஆக்க செய்ய வேண்டும்.
இங்கு தான் ஷாருக் ரஜினியை ஒரு காட்சியில் நடிக்க வைத்து தென் இந்திய மார்கெட் குறி வைத்தார். கண்டிப்பாக ஷாருக்கான் இதில் புத்திசாலி தான்.
சரி இந்தநாள் ரஜினிக்கு என்ன லாபம் ?
சிம்பிள் ... ராணா படத்தை ஷாருக் மாதிரி ஊர் ஊராக சுற்றாமல் வட இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்வர் அதுவும் ஷாருக்கை வைத்தே.
உட்கார்ர்ந்து கொண்டே மார்க்கெட்டிங் செய்வர் ரஜினி காந்த்
இதில் யாருக்கு லாபம் அதிகம் ?
Subscribe to:
Posts (Atom)